top of page

பக்கபட்டியில் காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம்...







இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்தியா முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர் க.சுந்தரலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசோலை பிரிவு சார்பாக *காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்* *22.10.2021* பக்கப்பட்டி கிராமத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் *டாக்டர்.பிலிப் பாஸ்கர்* அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.


இம்முகாமில் சுகாதார குழுவினர் *பக்கப்பட்டி கிராமத்தில்* வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரி சேகரித்து பரிசோதனை செய்தார்கள். மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், காசநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதாரக் கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


முகாமை துவக்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர் மு.சுந்தரி* அவர்கள் பேசுகையில் எச்ஐவி பாதிப்பு உள்ளோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள், கேன்சர் நோயாளிகள், புகையிலை பயன்படுத்துவோர் ஆகியோர்களுக்கு காசநோய் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதால் இவர்களைக் கண்டறிந்து காசநோய்க்கான பரிசோதனை செய்ய கருங்குளம் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் *செப்டம்பர் 2 முதல் நவம்பர் 1 வரை* சிறப்பு கவனம் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


இம்முகாமில் சுகாதார பார்வையாளர் *திருமதி.முத்துலட்சுமி,* ஆய்வக நுட்பனர் *திருமதி.ஜெமிலா,* பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை *திருமதி.கோமதி,* அங்கன்வாடி பணியாளர் *திருமதி.ரசூல்* சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை வல்லநாடு காச நோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற் பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்கள்.


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

advertisement



16 views0 comments
bottom of page