மேலப்பாளையம் பகுதிகளில் வல்கனைசிங் கடைகளில் மழைநீர் தேங்கும் வகையில் இருந்த பழைய டயர்கள் பறிமுதல்.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் ஆங்காங்கே உபயோகமில்லாத பழைய டயர்கள் சேமித்துவைக்கப்படுவதால் அதில் மழைநீர் தேங்கி டெங்கு நோயை உன்டாக்கும் கொசு புழுக்கள் உற்பத்தி ஆகிவிடும் என்பதால் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் உபயோகமில்லாத பழைய டயர்களை அப்புறப்படுத்தும் படி மாநகராட்சி அலுவலர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு. கண்ணன் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.சரோஜா அவர்கள் ஆலோசனையின்படி, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேமலா அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கர நாராயணன் மற்றும் சங்கரலிங்கம் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வல்கனைசிங் கடைகள் மற்றும் பழைய டயர் கடைகளில் மழைநீர் தேங்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களை பறிமுதல் செய்தனர்.




