பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி



பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கி பணிபுரியும் செவிலியர்கள் 50க்கும் மேற்பட்டோர் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம் அவர்கள் ஏற்பாட்டில் இன்று முதல் வருகிற 15-ஆம் தேதி வரை காலை மற்றும் மதியம் உணவு வழங்கப்படுகிறது.
நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை N கணேசராஜா மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளரும் நெல்லை மாவட்ட ஆவின் தலைவரான சுதா பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு உணவுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.