நெல்லை பேட்டை சத்யா நகர் பகுதியில் ஏழு லட்சத்து எழுபத்து நான்காயிரம் செலவில் புதிய மின் மாற்றி...


தமிழ் நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்புற கோட்டம் பேட்டை உபகோட்டம் பிரிவிற்குட்பட்ட சத்யா நகர் பகுதியில் ரூபாய் ஏழு லட்சத்து எழுபத்து நான்காயிரம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக பொது மக்கள், செயற்பொறியாளர் திரு.
முத்துக்குட்டி, திருநெல்வேலி டவுண் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் திரு. ஷாஜஹான், புதைவட உதவி செயற்பொறியாளர் திரு. சங்கர், பேட்டை உதவி பொறியாளர் திரு. சரவணன், கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளர் திருமதி. ஜன்னத்துல் சிபாயா, அவர்களை பாராட்டி பொறியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர். இந்நிகழ்வில் மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.