நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் வாகன காப்பகம் கட்டும் பணி - வாகனங்களை எடுத்துசெல்ல அறிவிப்பு...




நெல்லை வேய்ந்தான்குளம் பேருந்து நிலையத்தில் 11.75 கோடி மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன காப்பகம் கட்டும் பணி விரைவில் துவங்க இருப்பதால் பணி நடைபெறும் இடத்தில் நிறுத்தபட்டு உள்ள வாகனங்களை இரண்டு தினங்களில் உரிமையாளர்கள் கட்டணத்தை செலுத்தி எடுத்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தற்பொழுது வாகன காப்பகம் அமைந்துள்ள இடத்தில் ஒரு பகுதி மட்டும் இதற்காக ஒதுக்கப்பட்டு மீதமுள்ள இடத்தில் இருசக்கர வாகன காப்பகம் செயல்படுகிறது. இதற்காக பணி தொடங்கப்பட உள்ள இடத்தில் தற்பொழுது கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட இடத்தில் ( தற்பொழுது வாகன காப்பகம் செயல்பட்டுவரும் பகுதியில் வெளியே செல்லும் பாதை மற்றும் அதற்கு மேற்கு பகுதியிலுள்ள) நிறுத்தப்பட்ட கார்களை பொதுமக்கள் உடனடியாக எடுத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் புதியபேருந்துநிலையத்தில் கார் நிறுத்தம் கிடையாது.