top of page

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்..



நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவிலில் இன்று காலை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.. விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா வரும் 22- ந்தேதியும் , 28-ந்தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் .

தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோவிலும் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் தைபூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும் . இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனையும் , சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி –அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் . விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 22-ந்தேதி 4-ம் திருநாள் அன்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும் , 28-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்றுச் சிறப்பு மிக்க கைலாசபுரம் தீர்த்தவாரி மண்டபத்தில் சிறப்பாக நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி கோவில் சவுந்தர சபா மண்டபத்தில் வைத்து பிருங்கி முனி சிரேஷ்ட்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் திருநடனக்காட்சியும் , 30-ந்தேதி நெல்லையப்பர் கோவில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரன் என்கிற வெளித் தெப்பத்தில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்திருவிழா நடக்கிறது. இன்று காலை நடந்த கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

15 views0 comments
bottom of page