நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட நூற்றுக்கணக்கானோர் ஆரம்ப சுகாதார மையங்களில் குவிந்ததால் பரபரப்பு..






நெல்லையில் இன்று முதல் மீண்டும் கொரோனா தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் இன்று காலைமுதல் ஆரம்ப சுகாதார மையங்களில் குவிந்ததால் பரபரப்பு...
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தடுப்பூசி போட வந்ததால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தினறுகின்றனர். டோக்கன் கொடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று தடுப்பூசி போடுமாறு ஆரம்பசுகாதாரநிலைய ஊழியர்கள் அவ்வப்போது அறிவித்துவருகின்றனர். ஆனாலும் தடுப்பூசி போடவந்துள்ளவர்கள் இன்றுவிட்டால் தடுப்பூசி கிடைக்காது என்பதுபோல இன்றே தடுப்பூசி போட்டாகவேண்டும் என்று ஆர்வம்காட்டுவதால் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். பெருமாள்புரம் ஆரம்ப சுகாதாரநிலையத்தை பொறுத்தவரை படித்த, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பெரிய பதவியில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். ஆனால் இங்கு கூட சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வோ, ஆரம்ப சுகாதாரநிலைய பணியாளர்களின் அறிவுரைப்படி சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்கவேண்டும் என்ற அடிப்படை பொறுப்புகூட இல்லாதநிலை வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதனை சரிசெய்து சமூக இடைவெளியுடன் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் சமூக இடைவெளி கேள்விக்குறி.

