கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது...







நெல்லை மாவட்டம் மற்றும் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை ஒரே நாளில் 9.7 அடி உயர்ந்து அணையின் நீர் இருப்பு 111 ஆக உள்ளது. அதுபோல 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை ஒரே நாளில் 18.5 அடி உயர்ந்து 118 அடியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் பாபநாசம் பகுதியில் மட்டும் மழையின் அளவு 136 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு 9120 கனஅடியாக உயர்ந்துள்ளது. நெல்லையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் ஆற்று நீர் புகுந்துள்ளது...