பொதுமக்கள் நலன் கருதி "நெல்லை காவலன்" இருசக்கர ரோந்து வாகன திட்டம்...


திருநெல்வேலி மாவட்ட மக்களின் நலன் கருதி *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ. மணிவண்ணன் இ.கா.ப* அவர்கள் *"நெல்லை காவலன்"* என்ற பெயரில் 24 மணிநேரமும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் இருசக்கர ரோந்து வாகனத்தை இன்று நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் (24*7) *9952740740* தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கலாம், இதன் மூலம் ரோந்து காவலர்கள் சம்பவ இடம் நோக்கி விரைந்து சென்று முதற்கட்ட களப்பணி மேற்கொள்வார்கள் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பின்பு நாங்குநேரி மற்றும் வள்ளியூர் உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுடன் நடந்த அறிவுரை கூட்டத்தில்
காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், காவல்நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலைய பணிகளை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும் எனவும், காவலர்கள் பணியின்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் காவலர்கள் தங்கள் உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.