நெல்லை மாநகாில் நாடு வளம் பெறவும், நல்ல மழை பெய்யவும் பெண்கள் நடத்திய இந்திர விழா...

நெல்லை மாநகாில் நாடு வளம் பெறவும், மக்கள் சுபிச்சமாக வாழவும், நல்ல மழை பெய்யவும் இந்திரனை நினைத்து பெண்கள் கொண்டாடும் இந்திர விழா கோலாகலமாக நடந்தது.
நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களை இந்திரன் இயக்கி வருவதாக புராணங்களில் கூறப்படுகிறது. இயற்கை தன்னுடைய கடமையை சரிவர செய்வதற்கும், வருண பகவான் பூமியில் மழையை பொழிந்து பயிர்கள் செழித்து வளரவும் காரணமாக உள்ள இந்திரனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திர விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாநகா் வண்ணாா்பேட்டை அபித குஜலாம்பாள் மண்டலி சாா்பாக நாட்டில் நல்ல மழை பெய்து வளம்பெற, தாமிரபரணி நதிதீரத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட மண்ணில் பசுவும் கன்றும் செய்தும், முளைப்பாாி இட்டும் பெண்கள் இந்திர பூஜையை ஆரம்பித்தனா். கடந்த 11 தினங்களாக பெண்கள், குழந்தைகள் ஆகியோா் பாட்டுகள் பாடியும், கோலாட்டம் அடித்தும் ஸ்ரீ கிருஷ்ணபகவானை வழிபட்டனா். இந்திர விழா நிறைவாக இன்று சிறப்பு பூஜை செய்து கோலாட்டம் அடித்ததனா். நாட்டில் நல்ல மழை பொழிய வேண்டியும்,பயிா் செழிக்கவேண்டியும் வண்ணாா்பட்டை சிவன்கோயில் முன் குழந்தைகள், பெண்கள் கோலாட்டம் அடித்து பாட்டுகள் பாடினா். பின்னா் ஊா்வலமாக சென்று பசுவையும், முளைப்பாியையும் தாமிரபரணி நதியில் கரைத்தனா். வந்திருந்த பெண்கள், குழந்தைகளுக்கு தாம்பூலம், மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நெல்லை மாநகர பகுதியை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்