top of page

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இன்று தேசிய வாக்காளர் தின விழா...



அரசு அருங்காட்சியகம் நெல்லை, நேரு யுவகேந்திரா மற்றும் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு

நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் சுஷில் பரசுராம் பாட் தலைமை தாங்கினார்.


பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா முன்னிலை வகித்தார்.


அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி வரவேற்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சியில் "வாக்களிப்பதே ஜனநாயகத்திற்கு வலிமை "என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், கோலப்போட்டியும் நடைபெற்றது.


உதவி ஆட்சியர் (பயிற்சி)அலமேலு மங்கை இ.ஆ.ப.கலந்து கொண்டு உரையாற்றி, பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


அவர் பேசுகையில் "இளைய தலைமுறையினர் வாக்களிப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் வேண்டும். அனைவரும் வாக்களிப்பதன் மூலம் நமது ஜனநாயகம் வலுப்பெறும். "எனக் குறிப்பிட்டார்.


கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்திய ஆன் லைன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.


கலையாசிரியர் சொர்ணம் நன்றி கூறினார்.


இன்றைய போட்டிகளில் கவிதைப் போட்டியில் 45-நபர்களும், கோலப்போட்டியில் 35-பெண்களும் கலந்து கொண்டனர்.

80 views0 comments
bottom of page