வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய சித்தமருத்துவ தின விழா கொண்டாடப்பட்டது...



வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவப் பதிவு சார்பில் தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி ,வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், துணைத் தலைவர் மாரியப்பன், அலுவலக கண்காணிப்பாளர் அனந்தராமன், சமூக ஆர்வலர் தங்கராஜ் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர், சித்த மருத்துவத்தின் தொன்மை மற்றும் சிறப்பினை பற்றி சித்த மருத்துவர் செல்வகுமார் உரை நிகழ்த்தினார், அனைவருக்கும் பாரம்பரிய இனிப்பு வழங்கப்பட்டது, முடிவில் மருந்தாளுநர் வெங்கடேசன் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா , அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்*