தீ தொண்டு வாரம் - தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு துறையினருக்கு அஞ்சலி.



பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு இதுவரையிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது வீரமரணமடைந்த தீயணைப்பு துறையினருக்கு மாவட்ட அலுவலர் சத்திய குமார் அவர்கள் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் முன்னிலையில் பாளையங்கோட்டை நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய பணியாளர்கள் அனைவராலும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட அலுவலர் சத்ய குமார் அவர்கள் மலரஞ்சலி செலுத்திய பின்பு வீரமரணமடைந்த பணியாளர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தீயணைப்புத் துறையினருக்கு பணியின் போது பாதுகாப்பாக செயல்படுவது தொடர்பாக தக்க அறிவுரைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் தீயணைப்புத்துறை இயக்குனரின் உத்தரவுப்படி இந்த தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூட கூடிய வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள் மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தீ விபத்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்கள்.