top of page

நாங்குநேரி பகுதியில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு...






திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்ட மன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன் இ.கா.ப..,அவர்கள் உத்தரவின்படி நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ் அவர்களின் தலைமையில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


இந்த கொடி அணிவகுப்பு நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறுகால்குறிச்சி பகுதியில் முக்கிய வீதிகளில் நடைபெற்று பின் நாங்குநேரி கோவில் ரத வீதி,நாங்குநேரி பேருந்து நிறுத்தம், கோட்டப்பட்டி முக்கு, தெற்கு ரதவீதி வழியாக நாங்குநேரி காவல் நிலையம் வந்து நிறைவடைந்தது.

இக்கொடி அணிவகுப்பில் *நாங்குநேரி உதவி ஆய்வாளர்,எல்லை பாதுகாப்பு படையினர் 64 மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 100 பேர்* கலந்து கொண்டனர்.

7 views0 comments
bottom of page