top of page

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண் தொழில் முனைவோரின் கைவினை பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை









நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை வகித்தார். ஜே.சி.ஐ.ட்ரெண்ட்செட்டர்ஸின் தலைவர் சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். அரும்புகள் அறக்கட்டளை இயக்குநர் லதா மதிவாணன் முன்னிலை வகித்தார். தலைமைரை வழங்கிய காப்பாட்சியர் தனது தலைமையுரையில் " இரண்டு வருடங்களாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெண்களுக்கான இலவச கைவினை பயிற்சிகள் தொடர்ந்து அருங்காட்சியகத்தில் அளிக்கப்பட்டு வந்தன. இப்பயிற்சிகளில் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து

ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அப்பயிற்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள் பலர் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். அவர்கள் அருங்காட்சியகத்தில் கற்றுக்கொண்ட கைவினை பயிற்சிகளை கொண்டு தங்கள் வீடுகளில் இருந்த வண்ணம் சிறிய தொழில்களை செய்து வருகின்றனர்.

அவர்களின் இந்த முயற்சியை ஊக்கப் படுத்தும் நோக்கோடு நெல்லை அரசு அருங்காட்சியகம் ஜே சி ஐ திருநெல்வேலி ட்ரெண்ட் செட்டர் மற்றும் ஜே சி திருநெல்வேலி டைகூன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து வரும் இன்று ஞாயிறு 3/1/ 20 21 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருபதுக்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள் தயாரித்த கைவினை பொருட்கள், நவீன ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக் போன்ற 20 கடைகள் மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."என குறிப்பிட்டார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா வாழ்த்துரை வழங்கினார்.


திருநெல்வேலி மாநகர காவல்(சட்டம் &ஒழுங்கு) துணை ஆணையர் ச.சரவணன் கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றினார்.


அவர் பேசுகையில் "பெண்கள் தொழில் முனைவோராக உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். தொழில் வாய்ப்புகள் பெருகும்போதுதான் ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாகிறது. அந்த வகையில் இந்த பெண் தொழில் முனைவோருக்கு வாழ்த்துகள் "என குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியில் திருநெல்வேலி புற நகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரபாகர், முத்துமணி, முரளிதரன், நல்லசிவன், ஜே.சி.ஐ.ரெட்செண்ட் செட்டர்ஸ் செயலர் சுகுமாரன், முருகானந்தம், ஜே.சி.ஐ.திருநெல்வேலி டைகூன் செயலர் சேதுராமலட்சுமி, கவிஞர் சுப்பையா, கலையாசிரியர் சொர்ணம், தனுஷ்க் அரிகிருஷ்ணன் உட்பட பல மகளிர் தொழில் முனைவோர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.


ஜே.சி.ஐ.திருநெல்வேலி டைகூன் தலைவி கார்த்தீஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜே.சி.ஐ.திருநெல்வேலி ட்ரெண்ட் செட்டர்ஸ் தலைவி எம்.சுப்புலட்சுமி, செயலாளர் ஆர்.சுகுமாரன், ஜே.சி.ஐ.திருநெல்வேலி டைகூன் தலைவி கார்த்தீஸ்வரி,செயலாளர் சேதுராமலட்சுமி ஆகியோர் செய்து அருங்காட்சியத்தோடு இணைந்து செய்திருந்தனர்.

102 views0 comments
bottom of page