நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணைய வழி அருங்காட்சியவியல் பற்றிய சொற்பொழிவு




நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இணைய வழியாக பல்வேறு கல்வி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன அவற்றில் ஒன்றாக இன்று டிசம்பர் மாத சிறப்பு சொற்பொழிவில் அருங்காட்சியவியல் பற்றிய சொற்பொழிவு நடைபெற்றது. இச் சொற்பொழிவில் சேலம் மாவட்ட அருங்காட்சியக மூத்த காப்பாட்சியர்
திரு. ஜெ. முல்லை அரசு அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் அருங்காட்சியம் தோற்றம், பெயர்க்காரணம், உலகில் உள்ள அருங்காட்சியகங்களில் தோற்றங்கள் பற்றிய வரலாறு, இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் தோற்றங்கள் பற்றிய வரலாறு, சென்னை அரசு அருங்காட்சியகம் பற்றிய விளக்கமான உரை மற்றும் 20 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அருங்காட்சியகங்களில் முக்கியத்துவங்கள் பற்றி விரிவாக விளக்கினார். மேலும் அருங்காட்சியகத்தின் பிரிவுகள், மாவட்ட அருங்காட்சியகங்களின் நோக்கங்கள், மாவட்ட அருங்காட்சியகங்களில் பணிகள், ஆகியவற்றை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இந்த சிறப்பு சொற்பொழிவில் தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரியின் வரலாற்று துறை மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக கலந்து கொண்ட அனைவரையும் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ .சத்திய வள்ளி வரவேற்றார்.