ஜே.சி.ஜ.திருநெல்வேலி ட்ரெண்ட்செட்டர்ஸ் சார்பில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு..

ஜே.சி.ஜ.திருநெல்வேலி ட்ரெண்ட்செட்டர்ஸ் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ.ட்ரெண்ட்செட்டர்ஸின் திருநெல்வேலி தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் முத்துமாரி வரவேற்புரை வழங்கினார்.
வரைதல் மற்றும் இயற்கைப் பொருட்கள் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளருமான கவிஞர் பேரா பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், "வாழ்க்கை என்பதே போட்டிதான். இதில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஒரு படிப்பினைதான். போட்டிகளில் பங்கேற்பதே வெற்றிதான். மகாகவி பாரதியே கவிதைப் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்தானே. ஆயினும் பாரதியும், அவரது கவிதையும் இன்றும் நம்மோடு உயிரோடு இருப்பதையே ஒரு பாடமாகக்கொண்டு, வாழ்க்கையைக் ஙொண்டு செல்ல வேண்டும். விழிப்புணர்வு என்பது எல்லா நிலைகளிலும் நமக்கு வெற்றியைத் தரும். இன்றைக்கு நமக்கு வாக்காளர் விழிப்புணர்வு மிக அவசியமானதாகும். 2021-ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பெருமளவு கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பெற வேண்டும் "எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கராத்தே கற்பது குறித்து மாஸ்டர் ஸ்ரீஜாத் நல்லதொரு உரையாற்றினார். ஜே.சி.ஐ.உறுப்பினர் வனமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.