நெல்லை அருங்காட்சியகத்தில் இணையம் வழியாக கைவினைப் பயிற்சி.



நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையம் வழியாக ஜூம் செயலி வாயிலாக கைவினைப் பயிற்சி நடைபெற்றது. பண்டிகை காலத்தை முன்னிட்டு அழகிய குங்கும சிமிழ் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. தற்போது நவராத்திரி பண்டிகை காலத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. இன்று இப்பயிற்சியை யூனிக் ஃபேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கலை ஆசிரியர் கார்த்தீஸ்வரி அவர்கள் நடத்தினார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர் என்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி அவர்கள் தெரிவித்தார்.