நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வன உயிரி வார விழாவை முன்னிட்டு இணைய வழி தேசிய கருத்தரங்கு
நெல்லை அரசு அருங்காட்சியகம் மதிதா இந்து கல்லூரி உள் தர உத்தரவாதம் அமைப்பு மற்றும் விலங்கியல் துறையும் இணைந்து இன்று வன உயிரி வார விழாவை முன்னிட்டு இன்று இணைய வழி தேசிய கருத்தரங்கு நடத்தினர் இந்த நிகழ்வில் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி வரவேற்புரை ஆற்றினார். மதிதா இந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் சுப்பிரமணியன் தலைமை உரை ஆற்றினார் அவரைத் தொடர்ந்து மதிதா இந்து கல்லூரியில் விலங்கியல் துறை துறைத்தலைவர் முனைவர் சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார் ம.தி.தா இந்துக்கல்லூரியின் உள் தர உத்தரவாதம் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார் இன்றைய நிகழ்வின் சிறப்புரை காட்டுயிர் பேணல் ஓர் பார்வை என்கிற தலைப்பில் அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள சார்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மதிவாணன் காட்டுயிர்களை பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் மேலும் வவ்வால்கள் பற்றியும் நீர்நிலைப் பறவைகள் பற்றியும் புல்வெளிகள் பற்றியும் நமது சுற்றுச்சூழலில் உள்ள விலங்கினங்கள் மனித குலத்திற்கு ஆற்றும் நன்மைகள் பற்றியும் அவற்றை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதைப் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். உதவி பேராசிரியை கங்கா நன்றியுரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தெரிவித்தார்.

14 views0 comments