விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆன்லைன் சிறப்பு கைவினை பயிற்சி...



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கைவினை பயிற்சி வகுப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வண்ண களிமண் கொண்டு அழகிய விநாயகர் செய்யும் பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சியினை கலை ஆசிரியர் கார்த்தீஸ்வரி அவர்கள் நடத்தினார். இப்பயிற்சியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர் எனவே இப்பயிற்சி வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ மாணவியர், மகளிர் என ஏராளமானோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். இப் பயிற்சிக்கான ஏற்பாட்டினை நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர்
சிவ .சத்தியவள்ளி மேற்கொண்டார்