வசவப்பபுரம் சோதனை சாவடியில் மூதாட்டிக்கு முககவசம் வழங்கிய முறப்பநாடு காவல் ஆய்வாளர்...




தமிழகத்தில் முழுவதும் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவி வருகின்றதால் அதை தடுக்கும்விதமாக 144 தடை உத்தரவு தமிழக அரசால் மே 17ஆம் தேதி வரை 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம் சோதனை சாவடிகள் தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, நெல்லையிலிருந்து நடைபயணமாக அந்தவழியாக முகக்கவசம் இல்லாமல் சென்ற மூதாட்டி ஒருவருக்கு முறப்பநாடு காவல்துறை ஆய்வாளர் T.பார்த்திபன் அவர்கள் முகக்கவசம் வழங்கியதோடு அவருக்கு மதியம் உணவும் வழங்கினார்...மேலும் உணவின்றி தவிப்பவர்களுக்கும் அவர் உணவு வழங்கினார்.