காணாமல் போன ரூ.6,90,000 மதிப்புள்ள 58 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு.
காணாமல் போன ரூ.6,90,000 மதிப்புள்ள 58 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்களின் அதிரடி நடவடிக்கை.

திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போனது சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் மீது திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூபாய் 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று 02-09-2021 தேதி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். மேலும் இதற்கு முன்பாக இந்த ஆண்டு காணாமல் போன சுமார் 4,95,500/- மதிப்புடைய 43 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தஆண்டு மட்டும் நடப்பு மாதம் வரை சுமார் 11லட்சத்தி 85 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 101 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் திரு.T.P.சுரேஷ்குமார் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள், திரு.K.சுரேஷ்குமார் அவர்கள் ( குற்றம் மற்றும் போக்குவரத்து) அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.ஆறுமுகம் அவர்கள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் கண்ணன் அவர்கள், நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சண்முகவடிவு அவர்கள், சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.நடராஜன் அவர்கள், திருமதி.வித்யாலட்சுமி அவர்கள், தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள், மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆளினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.