நெல்லை மேலப்பாளையத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சென்போன் பறித்து சென்ற இருவர் கைது.

நெல்லை மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே தருவை புது காலனியைச் சேர்ந்த சத்யா என்பவர் 21-12-2022-ம் தேதியன்று நடந்து சென்ற போது அவ்வழியே வந்த நபர்கள் அவரிடமிருந்து O செல்போனை பறித்து சென்றதாக சத்யாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரசிதா அவர்கள் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட மேலப்பாளையம் ஆமின்புரத்தை சேர்ந்த திவான் மைதீன் (19) மற்றும் மேலப்பாளையம் சித்திக் நகரை சேர்ந்த ரபீஸ் ஹணி (19) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து 26-12-2022 ம் தேதியன்று, சிறையில் அடைத்தார்கள்.