top of page

காணாமல் போன 7 லட்சத்தி 67ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான 51 செல்போன்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுபடி, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்டத்தில் காணாமல் போன 7 லட்சத்தி 67 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான 51 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரித நடவடிக்கை. மேலும் இயற்கை சூழ்நிலையை பாதுகாக்க மரக்கன்றுகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.





திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள்* உத்தரவுபடி, *மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சீமைசாமி, அவர்கள், தலைமையிலான சைபர்கிரைம் போலீஸார், மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் திரு. ராஜ், உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம்‌, ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர்* காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


அதன்படி சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு *ரூபாய் 7 லட்சத்தி 67 ஆயிரத்து 200 மதிப்புள்ள 51 செல்போன்களை* அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து,செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, உரிய நபர்களிடம் இன்று (07.09.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் ஒப்படைத்தார்கள்.*

பின் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இதுவரை மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் 39 லட்சத்து 74 ஆயிரத்து 735 மதிப்புள்ள 315 செல்போன்களை மீட்டுள்ளனர்.* இதுவரை மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், செல்போன் தொலைத்த நபர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி அவற்றை நல்ல முறையில் பேணி வளர்க்கும் படி அறிவுரைகள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுப்பாராஜூ, திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி, மாவட்ட சைபர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு ராஜ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ராஜேஷ், கிரைம் உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.*

6 views0 comments
bottom of page