top of page

மேலப்பாளையம் பகுதியில் மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு - விரைந்து நடவடிக்கை எடுத்த மின்சாரவாரியம்



110/33/11kv மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து 33/11 கொக்கிரகுளம் துணை மின் நிலையத்திற்கு வரும் மின் பாதை33 kv கொக்கிரகுளம் பிடர் மின்கம்பியில் கனமழையின் காரணமாக மேலப்பாளையம் ராஜா நகர் வாட்டர் டேங்க் அருகில் அதிகாலை 3:45 மணியளவில் ஒரு பெரிய மரம் விழுந்து விட்டது. உடனடியாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சார்லஸ் மற்றும் உதவி மின் பொறியாளர் கார்த்திக் ஆகியோர் மின்வாரிய பணியாளர்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு உடனடியாக தீயணைப்பு அதிகாரியை தொடர்பு கொண்டு மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பைத் சீராக்க விரைந்து நடவடிக்கை எடுத்தார்கள்.மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர் . மின் தடையை உடனடியாக சரி செய்வதற்காக பொது மக்களுக்கு மாற்று ஏற்பாடு மூலம் உடனடியாக மின்சாரம் மாற்று வழியில் சீராக வழங்கப்பட்டது.

71 views0 comments
bottom of page