தமிழ் நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம் சிவராஜபுரம் பகுதியில் புதிய மின் மாற்றி

தமிழ் நாடு மின்சார வாரியம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்ப்புறம் கோட்டம் சந்திப்பு உபகோட்டம் மேலப்பாளையம் பிரிவில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவராஜபுரம் பகுதியில் ஏற்கனவே இருந்த மின்மாற்றியின் குறைந்தழுத்த மின்பளுவை அதிகரிப்பதற்காக ரூபாய் இரண்டு லட்சத்து எழுபதாயிரம் செலவில் புதிதாக ஒரு மின் மாற்றி அமைத்து மின்விநியோகம் சரி செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மேலப்பாளையம் உதவி பொறியாளர் திருமதி. ரத்னவேணி, கட்டுமானம் மற்றும் மேம்பாடு உதவி பொறியாளர் திருமதி. ஜன்னத்துல் சிபாயா, மின்வாரிய பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.