மேலப்பாளையம் II மின் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஞானியார் அப்பா தெருவில் புதிய மின் மாற்றி..






மேலப்பாளையம் II மின் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஞானியார் அப்பா தெருவில் ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசல் அருகில் புதிதாக 100 KVA மின் மாற்றி கூடுதல் மின் பளுவை குறைக்க அமைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் நகர்ப்புற கோட்டத்தில் கோட்டத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் ஜங்ஷன் திரு சார்லஸ் மற்றும் மேலப்பாளையம் II பிரிவு உதவி மின் பொறியாளர் கார்த்திக் குமார் மற்றும் பிரிவு பணியாளர்கள் காண்ட்ராக்டர் ஊழியர்கள் அனைவரும் பங்கு பெற்றார்கள். அந்த பகுதியில் உள்ள ஜமாத் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.