top of page

மேலப்பாளையத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது



மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக பாளை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டி (MMS) இணைந்து

ஞாயிற்றுக் கிழமை 13.12.2020 காலை 8 மணி முதல் கபசுர குடிநீர் வினியோகித்தல் முகாம் மேலப்பாளையம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது.


பொது மக்கள் அதிகம் கூடும் கீழ்க்கண்ட 11 இடங்களில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.


1)வாய்க்கால் பாலம் & கொடிமரம்


2)வாவர் பள்ளி அருகில்


3) குறிச்சி சந்திப்பு


4)பஜார் திடல்


5)உழவர் சந்தை


6)சந்தை ரவுண்டானா


7)கரீம் நகர்


8) தவ்பா பள்ளிவாசல் அருகில்


9)VST பள்ளி அருகில்


10)கொட்டிகுளம் பஜார்


11)மர்கஸ் பள்ளி அருகில்


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கும் எடுத்துச் சென்றனர்.


*நமது இந்த கபசுர குடிநீர் ஏறத்தாழ ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது*


இந்நிகழ்ச்சியில் மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டியின் தலைவர் M.B முகம்மது அலி ஜவஹர்,துணைத்தலைவர் T.A காஜா முயீனுத்தீன், செயலாளர் J.M.L ஜமால் முகம்மது லெப்பை, பொருளாளர் P.M முகைதீன் பாதுஷா, மற்றும் இணைச் செயலாளர் முனைவர்.N முகம்மது ரிழ்வான் மற்றும் செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பாளை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மருத்துவர்.மு.திருத்தணி,M.D.,(Sidha)அவர்கள் கலந்து கொண்டு சந்தை சந்திப்பு பகுதியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார்கள்.


இந்நிகழ்ச்சி சிறப்பாக தங்கு தடையின்றி நடைபெற உடல் உழைப்பு நல்கிய அனைத்து *செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், செயல்வீரர்கள்* அனைவருக்கும் மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டி சார்பாக அதன் துணைத் தலைவர் T.A காஜா முயீனுத்தீன் அவர்கள் நன்றி கூறினார்.

25 views0 comments
bottom of page