கோவில் கொடையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடு வாங்க அலைமோதும் கூட்டம் - உதவி ஆணையாளர் ஆய்வு..




ஆடி மாதம் கடைசி செவ்வாய்கிழமையான இன்று நெல்லை சுற்றுவாட்டாரப்பகுதியில் ஏராளமான கோவில்களில் கொடை விழா நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட கால்நடை சந்தை பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடு வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் கூட்டம் அலைமோதுகிறது இதையடுத்து மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகி பிரேம்லா, சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் சந்தைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தினர்.