கொரோனா பரவலை முன்னிட்டு மேலப்பாளையம் மண்டலத்தில் செயல் செயல்பட்டு வந்த கால்நடை சந்தை மூடப்பட்டது.




கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு மேலப்பாளையம் மண்டலத்தில் செயல் செயல்பட்டு வந்த அதிக நபர்கள் கூடும் கால்நடை சந்தை தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள விபரம் சந்தை நுழைவு வழியில்
வியாபாரிகள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது .
இருப்பினும் இதுகுறித்து அறியாத வியாபாரிகள் கூடியதால் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகிபிரேம்லா, மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது , துப்புரவு பணி பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வியாபாரிகள் கலைந்து செல்லும் வண்ணம்ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது .
காவல்துறையினரும் மேற்படி இடத்திற்கு விரைந்து வந்து அனைத்து பொது அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர் ..