கொரோனா ஊரடங்கு எதிரொலியாக தொழில் இழந்த மேளக் கலைஞர்கள் வீதிவீதியாக சென்று உதவி கேட்கும் அவல நிலை...


தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு முற்றிலுமாக தொழில் இழந்த மேளக் கலைஞர்கள் தங்களது குடும்பத்திற்கு ஒரே வாழ்வாதாரமான தங்களது தொழில் நலிவடைந்த நிலையில் அடுத்த வேளை உணவிற்காக வீதிவீதியாக சென்று தங்களது திறமைகளை வெளிக்காட்டி அதன்மூலம் உதவிகளைப் பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு தொழிலாளர் நல வாரியம் மூலமாக வழங்கிய உதவித்தொகை அதில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாததால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேளக்கலைஞர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News sponser : https://lapureherbals.in/
