வல்லநாடு மருத்துவமனைக்கு யுனைடெட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது..



தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு யுனைடெட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.பொற்செல்வன் அவர்கள் அனுமதியுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வல்லநாடு மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் கௌதம் ராஜ் அவர்கள் தலைமை வகித்தார். துணை இயக்குனர் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
சுகாதார ஆய்வாளர் சாகிர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
யுனைடெட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் பொது மேலாளர் முஹம்மது பாருக் அவர்கள் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை டாக்டர் கிஷோர் கௌதம் ராஜ் அவர்களிடம் வழங்கினார்.
வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், தூத்துக்குடி மஸ்ஜித் முகர்ரம் ஜும்மா பள்ளிவாசல் கௌரவ ஆலோசகர் அப்துல் கபூர் அஹமத்,
வருவாய் ஆய்வாளர் முத்துராமன், ஐந்தாவது வார்டு உறுப்பினர் முத்துராமலிங்கம் ஆகியோர்கள் கௌரவ விருந்தினராகவும், சமூக ஆர்வலர் சாது தங்கராஜ் பாண்டியன் சுவாமி, காயல்பட்டினம் மஹ்சரா அரபிக் கல்லூரி பேராசிரியர் முஹம்மது அஸ்பர் அஷ்ரபி ஆகியோர்கள் நல்லிணக்க விருந்தினராகவும் கலந்து கொண்டார்கள்.
இறுதியாக யுனைடெட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் தன்னார்வலர் முஹம்மது அப்பாஸ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ மருந்தாளுனர் வெங்கடேசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, மருத்துவமனை பணியாளர் வேம்பன், செவிலியர்கள், பொறியாளர் முஹம்மது முஸ்தபா, யுனைடெட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் தன்னார்வலர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.