பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீடு முகாம்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீடு முகாம் 21.3.22 அன்று பாளை நகர் வளமையம் சார்பில் பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. O முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு பார்வை, பேசுதல், கேட்டல் மற்றும் மனவளர்ச்சியில் குறைபாடு இருப்பின் அதனை கண்டறிய அதற்கான சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர்.
இம்முகாமில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை, மாதாந்திர உதவித் தொகை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், கல்வி உதவித்தொகை போன்ற பல நலத்திட்டங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருமதி. சுபாஷினி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு.சிவராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ், வட்டார கல்வி அலுவலர் ஜெபரத்தினம் சுகந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி. செண்பகா தேவி ஒருங்கிணைப்பாளர் மோ. எஸ்தர் நவரோஜி , ஆசிரியர் பயிற்றுநர்கள் திருமதி. கெளரிமாலா, திரு.வீரராகவன், திரு. பரமேஸ்வரன் மற்றும் திருமதி. கிருஷ்ணவேணி பாளை நகர் வளமைய இயன்முறை மருத்துவர் திரு. ஆல்வின் மற்றும் சிறப்பாசிரியர்கள் கீதா, ஜெப கிறிஸ்டி, சுதா, வெள்ளத்தாய் மற்றும் திருநெல்வேலி மாவட்ட சிறப்பாசிரியர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.