கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள்...
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பெருமாள்புரம் சி காலனி வாட்டர்டேங்க் அருகில் பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தின் சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது., முகாமில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அனைவருக்கும்கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர் ..



