NGO B காலனியில் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்
பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் NGO B காலனி குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் NGO B காலனி அமலா தொடக்கப்பள்ளியில் நடந்தது. முகாமில் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம். ஈ.சி.ஜி, ஹிமோகுலோபின் உள்ளிட்ட பரிசோதனைகளும், தோல், பல் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் NGO B காலணி குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் முத்துசாமி, செயலாளர் டாக்டர்.பத்ம ஸ்வர்ண சுப்பிரமணியன்,
பொருளாளர்
டி.ரங்கநாதன்
இணைச்செயலாளர்
டி.சரவணன்,
துணைத் தலைவர் ராமநாதன்,
செயற்குழு உறுப்பினர்
ராமசுப்பிரமணியன்,
ராமையா,
செந்தில்,
மார்சல்,
சங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.