top of page

கொரோனா நோய்தொற்றை தடுக்க மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை..

திருநெல்வேலி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தற்பொழுது கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் வேளையில் அதனை தடுக்கும் விதமாக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிருமிநாசினி தெளித்தல், மருத்துவ முகாம்கள், கபசுரக்குடிநீர் முகாம்கள் நடூத்துவது என பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு உடல் வெப்ப சோதனை, ஆக்சிஜன் அளவு, பல்ஸ் போன்றவை இந்த முகாமில் பரிசோதிக்கப்படுகிறது. முகாமின் போது உடல் வெப்பநிலையில் வேறுபாடு உள்ளவர்கள் கண்டறியப்படும் போது அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட என்.ஜி.ஓ காலனியிலுள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி மற்றும் தியாகராஜ நகர், பொன்விழா நகர். LIC காலனி, கணேசபுறம் பகுதியில் இன்று பெருமாள்புரம் நகர்புற

ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் முன்னீர்ப்பள்ளம்

ஆரம்ப சுகாதாரநிலையம் சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாம், நந்தினி, சுவாதி, பத்மபிரியா, வினோதினி மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்துகொண்டனர்...


மருத்துவர்கள் சாம், நந்தினி, சுவாதி - என்.ஜி.ஓ காலனி வருங்கால வைப்புநிதி அலுவலர் குடியிருப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்...



மருத்துவர்கள் சாம், நந்தினி, சுவாதி கணேசபுரம், குறிச்சி மருத்துவமுகாம்..

மருத்துவர் பத்ம பிரியா தியாகராஜநகர் காய்ச்சல் தடுப்பு முகாம்...



மருத்துவர் பத்ம பிரியா LIC காலனி காய்ச்சல் தடுப்பு முகாம்...



மருத்துவர் வினோதினி, பொன்விழா நகர் காய்ச்சல் தடுப்பு முகாம்...




34 views0 comments