தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்ததற்கு எதிர்ப்புதெரிவித்து நெல்லையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்...



தமிழகத்தில் 144 தடை உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து இன்றுமுதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 41 நாட்கள் ஊரடங்கு அமுலில் இருந்தநிலையில் அரசு வழங்கிய உதவித்தொகை மற்றும் உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லாதநிலையில் அன்றாடவாழ்க்கைக்கே சிரமப்பட்டுவரும் நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்திருப்பது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் என்று கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக மாநகர் மாவட்டசெயலாளர் KMAநிஜாம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் அரசு அமல்ராஜ். முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜோசப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.