மருதகுளம் அரசு பள்ளி விளையாட்டு விழா - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கலந்துகொண்டு பரிசு வழங்கினார்...
மருதகுளம் அரசு பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு காவல்துறை சார்பாக சிறப்பு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.



திருநெல்வேலி மாவட்டம், மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று இந்த ஆண்டிற்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினர்களாக *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிபபாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,அவர்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியர் திரு.கோகுல், இ.ஆ.ப (பயிற்சி)* அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ மாணவியருக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஏதேனும் விளையாட்டை தேர்ந்தெடுத்து அவ்விளையாட்டில் ஆர்வமுடன் விளையாடி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள்பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியரை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு காவல்துறை சார்பாக சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளியில் தமிழ் திறனாய்வு தேர்வு ஸ்காலர்ஷிப் தேர்வில் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்ட பதினொன்றாம் வகுப்பு *செல்வி. சிவனியம்மாள்* , என்பவருக்கும்,
மருதகுளம் பள்ளிக்கு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் Green Champian Award பெற உறுதுணையாக இருந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் *செல்வன்.ஆஸ்டின்* என்பவருக்கும், அரசு பள்ளிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் நடத்திய கலை விழா போட்டியில் தனிநபர் நடிப்புக்காக மாநில அளவில் தேர்வாகியுள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவன் *செல்வன். இசக்கிதாஸ்*, என்பவருக்கும் மற்றும் 2021-ம் ஆண்டு மருதகுளம் ஊரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படித்த பானுப்பிரியா என்ற மாணவி NEET தேர்வில் தேர்வாகி MBBS படித்து வருகிறார். இதற்கு உறுதுணையாக இருந்த வகுப்பு ஆசிரியர் *திரு.பிரபு ரஞ்சித் எடிசன்* அவர்கள் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு மேற்படி ஆசியர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை சார்பாக சிறப்பு பரிசு வழங்கி ஊக்குவித்தார்.