திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பு திறப்பு விழா.


தமிழக அரசு உத்தரவின் பேரில் மானூர் காவல் நிலையம் அருகில் ரூபாய் 5.5கோடியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் காவலர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 52 குடியிருப்புகளை இன்று *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார்.*
மேற்படி புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை *திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்,இ.கா.ப.,* அவர்கள் பார்வையிட்டு,ரிப்பன் வெட்டி, காவலர் குடியிருப்பில் குத்து விளக்கேற்றி வைத்தார்.
*இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெபராஜ், கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் திரு.பெருமாள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.*