ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் முக கவசம் வழங்கி உதவிய மானூர் காவல் துறையினர்...
*முழு ஊரடங்கு காலத்தில் மானூர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் முக கவசம் வழங்கி உதவிய மானூர் காவல் துறையினர்*
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில்,
திருநெல்வேலி மாவட்ட மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட *சமத்துவபுரம் மற்றும் வாகைகுளம் பகுதியில்* உள்ள ஏழை எளிய மக்களுக்கு *மானூர் காவல் நிலையம் சார்பில்,உதவி ஆய்வாளர் திரு.பழனி.,* அவர்கள் தலைமையில், காவல்துறையினர் உணவு பொட்டலங்கள் மற்றும் முககவசங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
*பிணி நீக்கும் போர்க்களத்தின் பொது மக்களின் பசியை நீக்கிய மானூர் காவல்துறையினரின் இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.*
செய்தி : *திருநெல்வேலி மாவட்ட காவல்துறை*