top of page

மணக்கரையில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...






2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநரும், காசநோய் மருத்துவப் பணிகள் மருத்துவர் சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் மணக்கரை வடக்கூரில் நடந்தது. இந்த முகாம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.


முகாமில் சுகாதார குழுவினர் மணக்கரை வடக்கூர் மற்றும் தெற்கூரில் உள்ள வீடுகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்தார்கள். மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


முகாமை துவக்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி கூறுகையில், மணக்கரையில் இன்று துவங்கிய இந்த முகாம் 24ம் தேதி வரை கருங்குளம் வட்டாரப்பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகள், செங்கல்சூளைகள், சிறுவர் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் ஆகிய பகுதிகளுக்கு எங்கள் மருத்துவ அலுவலர்கள் நேரடியாக சென்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்வாளர்கள். பொதுமக்கள் இதை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த முகாமில் சுகாதார பார்வையாளர் முத்துலெட்சுமி, செவிலியர் சுப்புலெட்சுமி, ஆய்வக நுட்பநர் ஜெமிலா, அங்கன்வாடி பணியாளர்கள் முத்துசெல்வி, ஐரிஸ், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.

4 views0 comments
bottom of page