மதுரை அலங்காநல்லூர் முடுவார்பட்டியில் வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் சிறப்பு நிகழ்ச்சி...



மத்திய மக்கள் தொடர்புத் துறை மதுரை கள அலுவலகம் மற்றும் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து இன்று முடுவார்பட்டி சமுதாய நலக் கூடத்தில் வீடுதோறும் மூவர்ணக்கொடி ஏற்றுதல் சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜன் சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம் குறித்து எடுத்துரைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி கொரோனா நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி முன்னிலைவகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன் மற்றும் பேராட்சிபிரேமா தலைமைதாங்கினர். கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் விருந்தினர்களை வரவேற்றார். நிறைவாக துணை ஊராட்சி மன்ற தலைவர் உமா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட சுய உதவி குழு மகளிர், பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூவண்ணக்கொடி வழங்கப்பட்டது. முன்னதாக மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் மூவண்ணக் கொடி ஏந்தி சென்றனர்.









