இன்று முழு ஊரடங்கு - வெறிச்சோடியது நெல்லை...












தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 5ம் தேதி 12ஆம் தேதி 19ஆம் தேதி 26 ஆம் தேதி ஆகிய நான்கு நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளான மருந்து மற்றும் பால் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் சேவை அனுமதிக்கப்படுகிறது. பொதுப்போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இன்று முழு ஊரடங்கு முன்னிட்டு அனைத்து பகுதியிலும் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.