முழுஅடைப்பின்போது உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி...

குற்றாலம் மெயின் அருவி பகுதியில் ஐந்து சாமியார்கள் உணவின்றி தவிப்பதாக நமது www.nellaijustnow.com வாட்சப் குழுவில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் அவர்களுக்கு உதவுமாறு நமது குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. செல்வம் அவர்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வரும் நண்பர் திரு.சிவ சண்முகராஜா அவர்களை தொடர்பு கொண்டு உணவின்றி தவித்து வரும் அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். குழுவில் தகவல் பகிரப்பட்டு அரைமணி நேரத்திற்குள் உணவு வழங்கி சேவை செய்த தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு நமது www.nellaijustnow.com குழு சார்பில் நன்றிகலந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்.


இந்த தகவலை அறிந்து அடுத்தடுத்து உதவி..
குற்றாலம் மெயின் அருவி பகுதியில் ஐந்து சாமியார்கள் உணவின்றி தவிப்பதாக நமது www.nellaijustnow.com வாட்சப் குழுவில் செய்தி வெளியிடப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் அவர்களுக்கு உதவுமாறு நமது குழு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தகவல்கிடைத்ததும் விரைந்துசென்று உணவு வழங்கி உதவி செய்த சைவ வேளாளர் இளைஞர் பேரவைத் தலைவர் மாரியப்பன் அவர்களுக்கு நமது www.nellaijustnow.com குழு சார்பில் நன்றிகலந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்.

நமது குழுவின் மீது நம்பிக்கைகொண்டு விரைந்து உதவிய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
S.சரவண ராஜன், முதன்மை செய்தி ஆசிரியர், www.nellaijustnow.com.