நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு காவல் துணை ஆணையர் வாகன சோதனை!



நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு காவல் துணை ஆணையர் சீனிவாசன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். வாகனங்களில் தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களை நிறுத்தி ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்குமாறு கேட்டுகொண்டார் மேலும் இதுபோல் மீண்டும் வந்தால் வழக்குபதிவு செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.