பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி - ஆணையாளர் தொடங்கிவைத்தார்
திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக நோய் தொற்று பரவல் அதிகமாக இருப்பதையடுத்து அந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி பாளையங்கோட்டை மண்டலம் முழுவதும் ஒரே நேரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகர சுகாதார அலுவலர் டாக்டர். சரோஜா பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் , சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட தீயணைப்பு அலுவலர் தலைமையிலான பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஒரே நாளில் 3 தீயணைப்பு வாகனங்கள், 12 மாநகராட்சி வாகனங்கள் 50 மாநகராட்சி பணியாளர்களை கொண்டு ஒரே நேரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவாதாக தெரிவித்தார்..





