அரசு அலுவலகங்கள் செயல்படுவது போல நீதிமன்றம் முழுமையாக செயல்பட வேண்டும் - வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)--ன் தீர்மானத்தின் படி, அரசு அலுவலகங்கள் செயல்படுவது போன்று நீதிமன்றமும் முழுமையாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஜெயபிரியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை விரைந்தது முடித்து 2 மாதங்களுக்குள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வருங்காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு கொள்கை அடிப்படையிலான நடவடிக்கை விரைந்து எடுக்க வலியுறுத்தியும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வாயிலின் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.