கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்...






தமிழகம் முழுவதும் 14-12-2020முதல் 24-12-2020 வரை காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றுவருகிறது
தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காசநோய் பிரிவின் பிரிவின் சார்பாக துணை இயக்குநர் மருத்துவ பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் அவர்களின் ஆலோசனையின் பேரில்
கடம்பூர் , கழுகுமலை மற்றும் கோவில்பட்டி நகர்ப்புற பகுதிகளில் வீடு, வீடாக சென்று 6652 நபர்களிடம் காசநோய் அறிகுறிகள் உள்ளனவா என்று கேட்டறிய பட்டது , இதில் 71 நபர்களிடம் சளி பரிசோதனை "சிபிநாட்" முறையில் பரிசோதிக்கப்பட்டது மேலும் 37 நபர்களுக்கு எக்ஸ்ரே மூலமாக காசநோய் பாதித்திள்ளாதா என்று கண்டறியபட்டது
நிறைவு நாளான இன்று கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கோவில்பட்டி நகராட்சியில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது
இம் முகாமை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் சீனிவாசன் கலந்து கொண்டு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் காசநோய் என்பது நகம்,முடி தவிர அனைத்து பகுதிகளையும் பாதிக்கக்கூடியது என்றார்
காசநோய் அறிகுறிகள் தென்படும் நபர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தில் எக்ஸ்ரே மூலமாக காசநோய் பாதித்துள்ளதா என கண்டறியப்பட்டது மேலும் காசநோயை கண்டறியும் அதி நவீன"சிபிநாட்" மூலமாகவும் பரிசோதிக்கப்பட்டது
இம் முகாமில் கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம், மாவட்ட காசநோய் டி.ஆர்.டிபி. ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், கோவில்பட்டி சுகாதார அலுவலர் இளங்கோ, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், முருகன், வள்ளிராஜ்,காஜா நஜ்முதீன், நுண்கதிர் வீச்சாளர் பலவேசம்,கிறிஸ்டி மற்றும் சுகாதார பார்வையாளர் திவ்யா, ஆய்வக நுட்புநர் ராஜகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்