கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கப்பட்டது
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கல்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையேற்று பேசியதாவது காசநோயாளிகள் வீட்டில் உள்ள நபர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்
கா

சநோய் பிரிவு மருத்துவர் வினோதினி பேசுகையில் காசநோயாளிகள் தினசரி உணவுகளில் புரதம்சார்ந்த பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் மேலும் சிகிச்சை முடிந்த இரண்டு வருடங்களுக்குள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சளி பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்

மேலும் இந்த நிகழ்ச்சியில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் , சுகாதார பார்வையாளர்கள் திருமதி . சுப்புலட்சுமி,திருமதி .மகேஸ் மற்றும் ஆய்வக நுட்புநர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் நன்றி கூறினார்