top of page

கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்...






சர்க்கரை நோயாளிகள் காசநோய் பரிசோதனை செய்வது அவசியம் துணை இயக்குநர் அறிவுறுத்தல்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது

மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்று பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறைப்புரையாற்றிய மருத்துவர் சுந்தர லிங்கம் துணை இயக்குநர் சுகாதார பணிகள் (காசம்) காசநோயால் பாதிக்கப்பட்டவரின் அறிகுறிகள் பற்றி பேசினார் மேலும் பரவும் தன்மை பற்றி எடுத்துக் கூறினார்.


காசநோய் முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் என்று கூறினார் காசநோய் பரிசோதனையை சர்க்கரை நோயாளிகள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் காசநோய் பரிசோதனை செய்வது மிக அவசியம் என்று அறிவுறுத்தினார்.


தலைமை வகித்து பேசிய கோவில்பட்டி நகராட்சி நகர்மன்ற தலைவர் கருணாநிதி பேசுகையில் அனைத்து தூய்மை பணியாளர்களும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நகரம் நலமாக வாழ முடியும் என்று கூறினார்.


நகராட்சி ஆணையர் ராஜாராம் பேசுகையில் தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளபட வேண்டிய பரிசோதனை பற்றி தூய்மை பணியாளர்களுக்கு எடுத்துக் கூறினார் மேலும் மருத்துவர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சுகாதார ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் குப்புசாமி (தீர்வு முறை அமைப்பாளர் மாவட்ட காசநோய் மையம் தூத்துக்குடி) மற்றும்

சந்தான சங்கர்வேல் (மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட காசநோய் மையம் தூத்துக்குடி)

மோகன் (அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மாவட்ட காசநோய் மையம் தூத்துக்குடி)

சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், காஜா நதிமுதின், சரவணன்

முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா

முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சரவணன்,

சுகாதார பார்வையாளர் மகேஷ் மற்றும் ஆய்வுகூட நுட்புனர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஏற்பாடு செய்திருந்தார்...

17 views0 comments
bottom of page